search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடையாளம் தெரியாத பெண் பிணம்"

    காவேரிப்பட்டணம் அடுத்த சந்தாபுரம் மேம்பாலம் அருகே அடையாளம் தெரியாத பெண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்துள்ளது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த சந்தாபுரம் மேம்பாலம் அருகே நேற்று மாலை 4 மணி அளவில் அடையாளம் தெரியாத பெண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து அப்பகுதி வி.ஏ.ஓ.விற்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த வி.ஏ.ஓ. போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் சடலத்தை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இது குறித்து அவர் கூறும்போது,

    பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்த அறிகுறிகள் உள்ளன. மார்பில் இருந்து இடுப்புவரை உரத்திற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பை சுற்றப்பட்டுள்ளது. மேலும், பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் மற்ற முடிவுகள் தெரியவரும். அடையாளம் தெரியாத நிலையில் பிணம் இருப்பதால் இவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சுற்று வட்டாரத்தில் உள்ள 45 வயது மதிக்கத்தக்க பெண் காணாமல் போனவர்கள் யாரேனும் இருந்தால் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் கொலையா? தற்கொலையா? என விசாரணை மேற்கெண்டு வருகின்றனர்.

    இதுவரை ஒரு வருடத்திற்குள் ஐந்து பேர் இந்த மேம்பாலத்தின்மேல் இருந்து கீழே விழுந்து இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலத்தின் சுற்றுச் சுவரை 7 அடி வரை உயர்த்தினால் இந்த மாதிரி நிகழ்வுகள் நிகழாது என பொதுமக்கள் கூறுகின்றனர்.
    திண்டுக்கல் அருகே அழுகிய நிலையில் கிடந்த பெண் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள தோட்டனூத்து செங்குளம் பகுதியில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். இந்த பகுதி முள்காடான ஆள்நடமாட்டம் குறைவாக காணப்படும் பகுதியாகும்.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். வி.ஏ.ஓ முகமது ஜக்காரியா திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் இறந்து 2 நாட்கள் ஆனநிலையில் இருந்ததால் உடல் அழுகி காணப்பட்டது. இதனால் முகம் அடையாளம் காண முடியவில்லை. இறந்தவர் யார்? எந்த ஊர்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தா.பேட்டை அருகே கோம்பை ஆற்று வாரியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தா.பேட்டை:

    தா.பேட்டை அருகே மங்களம் கிராமத்தில் உள்ள ருத்திராட்சை கோம்பை ஆற்று வாரியில் சுமார் 65 வயது மதிக்கதக்க பெண் இறந்து கிடப்பதாக அப்பகுதியினர் விஏஓ ரேவதிக்கு தகவல் தெரிவித்தனர்.  

    இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் ரேவதி ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் சென்று அடையாளம் தெரியாத அந்த பெண் உடலை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்துகிடந்தவர் யா? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×